குற்றாலம்

குற்றாலம் 

குற்றாலம்
                                                                                       குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ளது.இது தென்காசியில் இருந்து சுமார், ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.குற்றாலம் மிகச் சிறந்த சுற்றுலாத் திருத்தலமாகத் திகழ்கிறது.இது ,இயற்கைவளம் பொருந்திய எழில்மிகுக் காட்சியாக அமைந்ததுள்ளது. குற்றாலத்தில் விழுகின்ற நீரானது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி காடுகள்,மலைகள் மற்றும் பசுமை வாய்ந்த அரியவகை மூலிகைகள் வழியாக வருவதினால் இந்த நீர் சக்திவாய்ந்த மூலிகை நீராகவும் ,குளிர்ந்த நீராகவும் உள்ளது


.இந்த அருவி நீரில் குளித்தால் உடம்பிற்குப் புத்துணர்ச்சிக் கிடைக்கும்.உடலும்,மனமும் தெளிவும்,தூய்மையும் பெரும்.குற்றாலத்தில் குளிப்பதற்குச் செல்லும்போது கடுமையாகக் குளிர் நிழவும்.அங்கே,இயற்கையம்சம் பொருந்திய எழில்மிகு மலையிலிருந்து அற்புதமான வாடைக்காற்று வீசத் துவங்கும்.அங்கு,ஆர்ப்பரித்து கொட்டித்தீர்க்கும் அழகிய நீர்வீழ்ச்சியிலிருந்து பாறைக்கற்கள் அவ்வபோது வந்து விழும்.அருவியின் அருகே செல்லச் செல்ல குளிர் அதிகமாக இருக்கும் பற்களும்,உதடும் ஒன்றோடு ஒன்று அடித்துக் கொள்ளும்.அருவியில் குளிக்க ஆரம்பித்ததும் குளிர் காணாமல் போய்விடும்,அருவியில் கொட்டித்தீர்க்கும் நீரானது தலையில் இடி விழுந்தாற்போலக் கொட்டித்தீர்த்து விடும்.இங்கு, குளிப்பதினால் தலைபாரம், பித்தம் ,உடல் வலி,உடல் சூடு நீங்கி ,உடல் புத்துணர்ச்சிப் பெறும்.சோம்பல் நீங்கிச் சுறுசுறுப்பும்,தலைக்குப் புத்துணர்ச்சியும் தரும் .சருமம் பொலிவும் பெறும்.குளித்து முடித்து அருவியை விட்டுச் சற்று நகர்ந்ததும் நமக்கு குளிர ஆரம்பித்து விடும்.குளித்து விட்டு கடை வீதிக்கு வரும் முன்னரே தலைமுடி மற்றும் உடுத்திக் கொண்டிருந்த உடை எல்லாம் அங்கு வீசி கொண்டிருக்கும் இதமான குளிர்ந்தக் காற்றிற்குக் காய்ந்து விடும்.
          
                         


குற்றாலத்தில், திருக்குற்றாலநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருக்குற்றாலநாதர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த புனிதத் திருத்தலமாகும். இத்திருக்கோவில் பரிகாரங்களுக்குச் சிறந்தத் திருத்தலமாகத் திகழ்கிறது. இத்திருஆலயத்தின் உள்ளே,பிரகாரத்தைச் சுற்றி வலம்வருமிடத்தில்,மலையிலிருந்து விழுகின்ற அந்த அழகிய அருவியின் நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசிக்கலாம். மேலும் திருமணத் தடை உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்குச் சென்றுவந்தால் திருமணம் விரைவில் நடைபெறும் மற்றும்,குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்,மேலும் இத்திருக்கோவிலில் பிரதோஷம்,சஷ்டி,சதுர்த்தி ,கிருத்திகை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.குற்றாலத்தில் விழுகின்ற அருவி நீரானது அருகாமையில் உள்ள மற்ற திருக்கோவில்களுக்குப் புனித நீராகவும் பயன்படுகிறது.சுற்றுவட்டாரத்தில் உள்ள,கோவில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகத்தின் போது,பக்தர்கள் விரதமிருந்து குற்றாலம் சென்று அங்கு அருவியில் நீராடி,இப்புனிதநீரை குற்றாலநாதர் முன்னின்று வழிபாடுச் செய்கின்றனர்.பின்பு,அங்கிருந்து தங்களின் கோவில்களுக்குத் தீர்த்தக் குடமாக எடுத்துச் சென்று அபிஷேகம் செய்கின்றனர்,இங்கு குளிப்பதற்குச் செல்பவர்கள் அருவியில் விழுகின்றப் புனித நீரை இல்லத்திற்கு எடுத்துச் செல்வதுண்டு.இப்புனிதநீரை,வீட்டில் வைப்பதினால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும், ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பசாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும்.                                                                                                      
                                                                                                                                                                                                                                                         குற்றாலத்தில் மருத்துவக் குணங்கள் நிறைந்த அரியவகைப்பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவைகள் சீதாப்பழம், நட்சத்திரப் பழம், துரியன், ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் ஆகும்.இவ்வகையானப் பழங்கள் வண்ண வண்ண நிறங்களில் காணப்படுகின்றன.குற்றாலத்தில் குளித்து விட்டு ஊருக்குத் திரும்பும் பயணிகள் அனைவரும் விரும்பி வாங்கிச் செல்லும் பழங்களாகும்.நீங்கள் குற்றாலத்திற்குப் புதிதாக வருபவர்கள் என்றால் இப்பழங்களைக் கட்டாயம் வாங்கிச் சாப்பிடுங்கள்.இங்கு, வெட்டிவேர்,ஆலவேர் போன்ற மூலிகைக் குணம் கொண்ட வேர்கள் கிடைக்கும்.நாம் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்களில் இந்த வேர்களைப் போட்டுப் பயன்படுத்தலாம்.இவ்வாறு பயன்படுத்துவதினால் தலைக்குக் குளிர்ச்சியும்,தலை முடிக்கு நீளமும்,அடர்த்தியும் கொடுக்கின்றது. குற்றாலத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் மிக மலிவான விலையிலேயே நமக்குக் கிடைக்கின்றன.அழகு சாதனப் பொருட்கள்,ஓவியங்கள்,கண்திருஷ்டிப் பொம்மைகள்,வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் இது போன்ற எண்ணற்றப் பொருட்களை நாம் வாங்கிச் செல்லலாம் குற்றாலத்தில் குளித்து விட்டு வரும் வழியில்
                           

                                                            குற்றாலத்தில் மொத்தம் மெயின் அருவி ,ஐந்தருவி , புலியருவி, செண்பகாதேவிஅருவி, தேனருவி மற்றும் சிற்றருவி போன்ற அருவிகள் அமைத்துள்ளன.
மெயின் அருவிக்கு மேலே செண்பகாதேவி அருவியும், தேனருவியும் அமைந்துள்ளது.
அங்கு,செல்வதற்கு அனைத்து நேரங்களிலும் அனுமதி கிடைப்பதில்லை.ஐந்தருவியில் விழுகின்ற நீர்வீழ்ச்சிக்கும்,மெயின் அருவியில் விழுகின்ற நீர்வீழ்ச்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.அது வேறு மலையிலிருந்து விழுகின்ற நீர்வீழ்ச்சி,இது வேறு மலையிலிருந்து விழுகின்ற நீர்வீழ்ச்சி.ஐந்தருவியில் விழுகின்ற நீர்வீழ்ச்சியானது பார்பதற்கு மிகச் சிறிய உயரத்தில் விழுகின்ற நீர்வீழ்ச்ச்சியைப்போலக் காணப்படும்.ஐந்தருவியில் ஐந்துப் பக்கங்களிலிருந்தும் விழும் அருவி நீரானது காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.ஐந்தருவியைச் சுற்றிலும் பசுமை நிறம் கொண்ட அடர்ந்த வனமாகக் காணப்படும்.அருவிகளிலே மிகவும் சிறியது புலியருவி.இங்கு கூட்டம் சற்று வழக்கத்தை விடக் குறைவாகவேக் காணப்படும்.ஏனென்றால்,எல்லா அருவிகளுக்கும் நீர் வரத்து சற்று அதிகமாக இருந்தால் மட்டுமே புலியருவியில் நீர்வர ஆரம்பிக்கும்.குற்றாலம், பேருந்து நிலையம் சென்றால் எல்லா அருவிகளுக்கும் செல்வதற்குப் பேருந்துகள் இருக்கும்.அங்கிருந்து,அனைத்து இடத்திற்கும் சுலபமாக நாம் செல்லலாம் .குற்றாலத்தில் படகு சவாரியும் உள்ளது.
சூடான டீ, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய்பஜ்ஜி, மெது வடை,குற்றாலம் பேமஸ் நேந்திரங்காய் சிப்ஸ், சுடசுட இலை அல்வா, பாகற்காய் சிப்ஸ், மாங்காய் , அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், ஜெர்ரிப்பழம், நுங்கு, இளநீர் பதநீர் ஆகியவற்றை நாம் வாங்கிச் சாப்பிடலாம்.அதை, அந்தக் குளிர்ந்தக் காற்றில் வாங்கிச் சாப்பிடும் போது ஒரு புதுவித அனுபவத்தை நமக்குக் கொடுக்கும்.குற்றாலத்தில் குளித்த அன்று இரவு வீட்டில் தூங்கும் போது உடல் அடித்துப் போட்டது போல் சுகமானத் தூக்கம் பெறலாம்.

Comments