Sree Arunjunai Katha Ayyanar Kovil,Melaputhukudi

அருஞ்சுனை காத்த அய்யனார் 

                                       அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேலப்புதுக்குடி என்னும் இடத்தில் அமைத்துள்ளது . இத்திருக்கோவில் திருச்செந்தூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருச்செந்தூர் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அம்மன்புரம் என்னும் இடத்தில் இறங்கவேண்டும், பின்பு  அங்கிருந்து அய்யனார் கோவில் 3 கிலோ மீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது .இத்திருக்கோவில் மிகவும் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது.  கோவிலில் உச்சிகால பூஜை நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே  நடைபெறும் மேலும் கோவிலைச்  சுற்றி கடைகள் ஏதும் கிடையாது ஆகவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூஜைக்குத்  தேவையான பொருட்களை வரும் போது வாங்கிக்கொண்டு வர வேண்டும். இத்திருக்கோவிலில் அல்லிப்  பூக்கள் மலர்ந்த வண்ணம் இயற்கை எழில்மிகு தெப்பம் அமைந்துள்ளது. அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பத்தில் நீராடி அய்யனாருக்கு பொங்கல் வைத்து கும்பிடுவார்கள். திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக பார்க்கக்கூடிய இடம் இக்கோவிலில் அய்யனார் மட்டும் அல்லாது கருப்பசாமி ,இசக்கி அம்மன் ,சுடலை மாடசாமி போன்ற குலதெய்வங்களும் அமைந்துள்ளது.

 


                                                                                                                                                                                                   











   




Comments