பொன்முடி கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. பொன்முடி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100மீட்டர் உயரத்தில் உள்ளது.பொன்முடி மிகவும் குளிர்ந்த சூழ்நிலையில் இருக்கும் ஆகவே அங்கே குழந்தைகளையும் அழைத்துச் செல்வதாக இருந்தால் அவர்களுக்குத் தேவையான குளிர்கால ஆடைகளை எடுத்துச் செல்வது நல்லது. பொன்முடிக்கு குளிர்காலத்தில் செல்வது சிறப்பாக இருக்கும் . மேலும் பொன்முடி மலைக்கு பிளாஸ்டிக் மற்றும் உணவு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. பொன்முடி மலையில் மொத்தம் 22 ஹேர்பின் வளைவுகள் இருக்கும் .ஆகவே வாகனஓட்டிகள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டும். பொன்முடி மலையில் பயணத்தை தொடங்கும் போது குளிர்ந்த காற்று , காற்றின் ஓசை , பனிபடர்ந்த பாதை இவை அனைத்தும் நம்மை நகரத்து வாழ்க்கையை மறந்து இயற்கையின் அழகை ரசிக்கத் தூண்டும் .மேலும் செல்லும் வழியில் தேயிலைத் தோட்டங்களை காணமுடிகிறது. பொன்முடி மலை உச்சியை அடைந்தப் பிறகு வானத்து மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளை வருடுவது போன்ற காட்சிகளை கண்டு ரசிக்கலாம் . பொன்முடி மலையில் எங்கு பார்த்தாலும் மலைகள் , புல்வெளிகள் , மரங்கள் மற்றும் பறந்து செல்லும் வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவற்றைக் காணமுடிகிறது.

Comments
Post a Comment